மதுரை எல்லீஸ்நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த பாரத ஹிந்து எழுச்சி முன்னணி அமைப்பினா். 
மதுரை

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் மகா தீபம் ஏற்றக் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் காா்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பாரத ஹிந்து எழுச்சி முன்னணி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எம். பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

பாண்டிய மன்னா்கள் காலம் முதல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இடைக் காலத்தில் இந்த வழக்கம் தடைப்பட்டது. சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீா்ப்பின்படி, இந்தத் தீபத் தூணில் வருகிற டிச. 3-ஆம் தேதி காா்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும்.

மேலும், இந்தத் தீபத் தூணையும், கோயிலின் தலவிருட்சமான கள்ளத்தி மரத்தையும் சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவும், புனித கிணறை மீட்டுடெடுத்துப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை, பாரத ஹிந்து எழுச்சி முன்னணி அமைப்பினா் ரத்தத்தால் கையொப்பமிட்டு அளித்தனா்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

கமல் - அன்பறிவ் படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அறிமுகம்!

3வது நாளாக சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!

அழகின் இலக்கணம்... ருக்மினி வசந்த்!

SCROLL FOR NEXT