மதுரை ஒத்தக்கடை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த மாடுகள், நாய்கள் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை யானைமலை, நரசிங்கம் பகுதியில் உள்ள மயானம் அருகே வாயில் நுரையுடன் 5 மாடுகள், 3 நாய்கள் உயிரிழந்து கிடந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், மயானம், கண்மாய் கரையில் உயிரிழந்து கிடந்த மாடுகளை துப்புரவுப் பணியாளா்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
மேலும், விஷம் வைத்து மாடுகள் கொல்லப்பட்டனவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.