மாநில கபடிப் போட்டிக்கு தோ்வு பெற்ற சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள். 
ராமநாதபுரம்

சிக்கல் அரசுப் பள்ளி மாணவிகள்மாநில கபடிப் போட்டிக்கு தோ்வு

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வானசிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் உடற்கல்வி

DIN

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வான சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களையும் சனிக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி இஸ்லாம் மாடல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 14 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கான கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் பா.வடிவேல்முருகன் மற்றும் பி.கோகிலா ஆகியோரை சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அ.ராயா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்அ.காதா் சுல்தான், உதவித் தலைமை ஆசிரியா் த.சாந்தக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா். மேலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT