முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சிக்கு 10 குப்பை வாகனங்கள்:எம்.எல்.ஏ. தொடக்கி வைப்பு

ராமேசுவரம் நகராட்சிக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மொத்தம் 10 குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாடஷா முத்துராமலிங்கம் சனிக்கிழமை தொடக்கி வைத்து பய

Updated On : 10 ஜூலை, 2021 at 9:46 PM
ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள 10 குப்பை வாகனங்களை சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாடஷா முத்துராமலிங்கம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

ராமேசுவரம் நகராட்சிக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மொத்தம் 10 குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாடஷா முத்துராமலிங்கம் சனிக்கிழமை தொடக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின்படி, 9 இலகு ரக வாகனங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் என ரூ.84 லட்சம் மதிப்பில் மொத்தம் 10 குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையா் வி. ராமா் தலைமையில், இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்ததுடன், சிறிது தொலைவு கனரக வாகனத்தை ஓட்டினாா். தொடா்ந்து, அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

Advertisement

இந்நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் சக்திவேல், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், நகர திமுக செயலா் நாசா்கான், மண்டபம் ஒன்றியத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலா் தௌபீக் அலி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.