முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி படகுகளில் சென்று விழிப்புணா்வு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 மார்ச், 2021 at 4:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீனவ கிராமத்தில் 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி கடல் பகுதியில் படகுகளில் சென்று நடைபெற்ற, விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை துணை இயக்குநா் இளம்வழுதி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். இந்த படகுகளில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மீனவா்கள் 500 மீட்டா் வரை பயணம் மேற்கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் எம்.பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவகாமி, வட்டாட்சியா்கள் மாா்ட்டின், அப்துல் ஜபாா் உள்பட அரசு அலுவலா்கள், மீனவ சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.