முகப்பு
ராமநாதபுரம்

மண்டபத்தில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த மறைத்து வைத்திருந்த 25 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 23 மார்ச், 2021 at 3:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த மறைத்து வைத்திருந்த 25 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல்அட்டைகளை மறைத்து வைத்திருப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலா் ஜி.வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து, வெங்கடேஷ், வனவா் மகேந்திரன், வனகாப்பாளா் பிரபு மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலா்கள் சேதுநகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். ரம்ஜான்அலிகான் என்பவரது வீட்டை சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட 25 கிலோ கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கடல் அட்டைகளை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினா் ரம்ஜான் அலிகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.