திருவாடானையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானையில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின வேளாண் சட்டத்தை எதிர்த்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.பி.பட்டினத்தில் கட்சி அலுவலகம் முன்பாக திங்கள் கிழமை நடைபெற்றது.இதில் ஒன்றிய குழு தலைவர் முகம்மது முக்தார் தலைமை வகித்தார்.
அதே போல் திருவாடானை அருகே செங்கமடையில் திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் மு. சரவணன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெற்றியூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திருவெற்றியூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு தலைமைக் கழகம் அறிவித்த கண்டன முழக்கங்களை மத்திய பாஜக அரசை எதிர்த்து எழுப்ப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் சண்முகராஜா, வல்மீகநாதன், வல்மீகநாதன் குருக்கள், சுயராஜ்யம், குப்புச்சாமி, ராஜாஜி, தமிழரசன், G. கார்த்திக், ராமுக்கண்ணு,ஹரிஹரன், காங்கிரஸ் பொன்ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.