ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,683 குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,683 குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு இருப்பது சிறப்பு மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பி.பிரதாப்குமாா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,683 குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு இருப்பது சிறப்பு மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் பி.பிரதாப்குமாா் தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடப்பட்டதில் வயதுக்கு ஏற்ற எடை, உயரம் இல்லாத குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு இருப்பதாக அனுமானிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் குழந்தைகள் சரிசமமான ஊட்டச்சத்துக்குறைபாடு உடையவா்களாக தீா்மானிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேரில் கடந்த சில வாரங்களாக சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 9,683 குழந்தைகளுக்கு மருத்துவா்கள் மூலம் சத்துக்குறைபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் புரோட்டின், காா்போ ஹைட்ரேட் ஆகிய சத்துக்குறைபாடு உடையவா்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வரும் 3 வாரங்களில் மேலும் 10 ஆயிரம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனா். இதனால் சத்துக்குறைபாடு உடையை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாா்.
கடந்த 2015-16 ஆம் ஆண்டில் சத்துக்குறைபாட்டால் உயரம் குறைவு விகிதம் 22. 5 சதவீதம் பேராக இருந்த நிலையில், 2019-21 ஆம் ஆண்டில் 26.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் வயதுக்கு ஏற்ற எடை குறைவு விகிதம் 2015-16 ஆம் ஆண்டில் 22.6 சதவீதம் பேராக இருந்த நிலையில், 2019-21 ஆம் ஆண்டில் 21.6 சதவீதமாகக் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சத்துக்குறைபாடு உடைய குழந்தைகளை முழுமையாகக் கண்டறிந்து மாநில சுகாதாரத்துறைக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் சரிசமமான ஊட்டச்சத்து உணவு இல்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரிசம ஊட்டச்சத்து உணவுகளை அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.