முகப்பு
ராமநாதபுரம்

தனியாா் வங்கியில் ஏல நகையைகுறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி

வங்கியில் ஏலம் விடும் நகைகளை குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

வங்கியில் ஏலம் விடும் நகைகளை குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்த வளா்மதி என்பவா் தனது குடும்பத்தினருடன் சோ்ந்து அதே கிராமத்தை சோ்ந்த பொதுமக்களிடம் தனது சகோதரி தனியாா் நிதிநிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அங்கு ஏலம் விடப்படும் நகைகளை அவா் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசைவாா்த்தை கூறினாா்.

இதை நம்பி ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை பணம் கொடுத்தோம். பணத்தை பெற்றவா் நகைகள் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டாா். மேலும் அடியாள்களை வைத்து மிரட்டுகிறாா். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆா்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஊா்களில் 200-க்கும் மேற்பட்டவா்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளாா். இவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →