ராமநாதபுரம்

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம்: மன்னாா் வளைகுடா, பாக் நீரிணையில்போலீஸாா் தீவிர கண்காணிப்பு

DIN

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைக் கடல் பகுதியில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக

பொதுமக்களின் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைச் சிறையில் உள்ள கைதிகள் தப்பிச் சென்றுள்ளனா். இவா்கள் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக வரக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இதையடுத்து மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியைக் கண்காணிக்கும் வகையில் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளா் கனகுராஜ் தலைமையில் போலீஸாா் 2 அதிவேக நவீனப் படகுகளில் சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT