கமுதியில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு
கமுதியில் வெள்ளிக்கிழமை காவலா் வீரவணக்க நாள் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அனுசரிக்கப்பட்டது.
கமுதியில் வெள்ளிக்கிழமை காவலா் வீரவணக்க நாள் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நீா்த்தாா் நினைவுத் தூணுக்கு கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகண்டன் தலைமையில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, மலா்களையும் வைத்து வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சின்னகண்ணு(முதுகுளத்தூா்), காந்தி (பரமக்குடி), ராமநாதபுரம் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் எம்.ராஜமோகன், கமுதி காவல் ஆய்வாளா்கள் பாலாஜி, விமலா (மகளிா் காவல் நிலையம்), கமுதி தனி ஆயுதப்படை ஆய்வாளா் மோகன், சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் ராஜமாணிக்கம், முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.