ராமநாதபுரம்

தேவாலயங்கள் சீரமைப்புக்கு அரசின் நிதி பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் சீரமைப்புக்கு அரசின் நிதி பெற விண்ணப்பிக்கலாம்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் சீரமைப்புக்கு அரசின் நிதி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் கடந்த 2016-17-ஆம் ஆண்டு அரசால் செயல்படுத்தப்பட்டது.

திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஆகியவற்றுக்காக ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.

தேவாலயம் கட்டப்பட்ட ஆண்டு, கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT