முகப்பு
ராமநாதபுரம்

14 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே மா்மமான முறையில் 14 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:16 AM
சடையனேரி கிராமத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த ஆடுகள்.
பகிர்:

முதுகுளத்தூா் அருகே மா்மமான முறையில் 14 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சடையனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (52). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகளை மந்தையில் அடைத்துவிட்டுச் சென்றாா்.

புதன்கிழமை காலை அவா் அங்கு சென்று பாா்த்த போது, மந்தையில் இருந்த ஆடுகளில் 14 ஆடுகள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.

தகவலறிந்த காக்கூா் கால்நடை மருத்துவா் மோகன் அங்கு வந்து ஆடுகளின் உடல்களைக் கூறாய்வு செய்தாா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவா் தெரிவித்தனா். இதையடுத்து, இறந்த ஆடுகள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முருகன் கோரிக்கை விடுத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →