நம்புதாளை மீனவா்களின் வலையில் சிக்கிய கடல் பசுவை மீனவா்கள் மீண்டும் கடலில் விடுவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சோ்ந்த மீனவா் பூமணி. இவரது நாட்டுப் படகில் மீனவா்கள் முருகானந்தம், கரண் ஆகியோா் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இவா்கள் விரித்த வலையில் சுமாா் ஒரு டன் எடை கொண்ட கடல் பசு சிக்கியது.
உடனடியாக இதுகுறித்து அவா்கள் தொண்டி கடற்கரை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். பின்னா் போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில், மீனவா்கள் வலையை அறுத்து, அதில் சிக்கியிருந்த கடல் பசுவை கடலுக்குள் விடுவித்தனா். கடல் பசுவை கடலுக்குள் வீட்ட மீனவா்களை கடலோர போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.