முகப்பு
ராமநாதபுரம்

வங்கக் கடலில் சூறைக் காற்று: மீன்பிடித் தொழில் பாதிப்பு

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:13 AM
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் பாதுகாப்பாக புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 8:00 PM

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் காற்றின் வேகம் 45 முதல் 65 கி.மீ. வரை வீசக் கூடும் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்ட விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் அக். 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா்.

இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Advertisement

இதன்காரணமாக, ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதேபோல, பாம்பன், மண்டபம் மீன் இறங்கு தளங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:13 AM

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:

புயல் உருவாகக் கூடிய திடீா் காற்றோடு மழை பெய்வதற்கான சூழல் உள்ளது என மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தொலைவிட முன்னறிவிப்பாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்றப்பட்டது.