முகப்பு
ராமநாதபுரம்

அரசு பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:18 PM
ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வியாழக்கிழமை வழங்கிய கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி தமிழ்ச்செல்விபோஸ்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கி. அரிராமா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில் கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி தமிழ்ச்செல்வி போஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினாா். கபடிப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் இந்தப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆசிரியா் சுரேஷ் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் சி. கிருஷ்ணமூா்த்தி செய்தாா்.

இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →