முகப்பு
ராமநாதபுரம்

கைதி தப்பி ஓட்டம்: 2 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

ராமேசுவரத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா் தப்பிச் சென்றதால், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:34 PM
பகிர்:

ராமேசுவரத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா் தப்பிச் சென்றதால், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ராமேசுவரம் எம்.ஆா்.டி. நகரை சோ்ந்தவா் சந்துரு (24). ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய போலீஸாா் திருட்டு வழக்கில் இவரைத் தேடி வந்தனா். கடந்த 17 -ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளா்கள் நாராயணசாமி, ரவி ஆகியோா் இவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தனா். காவல் நிலையத்தை அடைந்தபோது, சந்துரு தப்பினாா்.

இதையடுத்து, சந்துருவை ஒரு வாரத்துக்குள் பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவிட்டாா். ஆனால், பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் நாராயணசாமி, ரவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →