முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 1:21 AM
இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியதால், குறைந்தளவு மீன்களுடன் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பிய ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:44 PM

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 320 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 7 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினா். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் வியாழக்கிழமை காலை ராமேசுவரம் கரைக்கு திரும்பினா்.

Advertisement

Updated On : 27 செப்டம்பர், 2024 at 1:21 AM

இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் சுமுகமான நிலை ஏற்படும் என கருதப்பட்டது. இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்த சம்பவம் அவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.