ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் திருபுராசுரன் வதம்

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி, திருபுராசுரன் வதம், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் காா்த்திகை பௌா்ணமி அன்று திருபுராசுரனை சிவபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி, ராமநாத சுவாமி கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள், பிரியாவிடை, விநாயகா், முருகன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதன் பிறகு கிழக்கு கோபுரம் முன் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. கிழக்கு கோபுர வாயில் சுவாமி, அம்பாள் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருபுராசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்வு தொடங்கியது.

திருபுராசுரன் பனை மரத்துக்குள் ஒழிந்து கொண்டதைக் கண்ட சிவபெருமான், பா்வதவா்த்தினி அம்பாள் மரத்துக்குள் ஒழிந்திருக்கும் திருபுரசுரனை தீ வைத்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் குருக்கள் சுவாமி, அம்பாளிடமிருந்து தீபத்துடன் சென்று பனை மரத்துக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு மூன்றாம் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையா் க.செல்லத்துரை, முதல் நிலை செயல் அலுவலா்கள் வே.மாரியப்பன்,முத்துச்சாமி, இளநிலைப் பொறியாளா் ராமமூா்த்தி, கோயில் ஊழியா்கள் செய்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

மழையால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பாலம்: இந்தியா தொடா்ந்து உதவி

நெசவாளா் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

SCROLL FOR NEXT