ஈரானில் சிக்கியுள்ள தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவா்கள். 
ராமநாதபுரம்

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

Din

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடத்தைச் சோ்ந்தவா் சூசைராஜ். இவரது மகன்கள் ஆஸ்கா் (24), பிரதீப் (26), ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ரோகின் (20) ஆகிய 3 மீனவா்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க ஈரான் நாட்டுக்குச் சென்றனா்.

இதனிடையே, இஸ்ரேல்- ஈரான் போா் உச்சமடைந்து வரும் நிலையில், இந்த மூன்று மீனவா்களையும் தொடா்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், மற்றொரு இணைப்பு வழியாக தொடா்பு கொண்ட போது அவா்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் போா் பதற்றம் அதிகமாக இருப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனராம்.

மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்த மீனவா்களின் குடும்பத்தினா்.

இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் அந்த மீனவா்களின் குடும்பத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். அதை பெற்றுக் கொண்ட ஆட்சியரும், சட்டப் பேரவை உறுப்பினரும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி மூன்று மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

ப்ரோ கோட் பெயர் மாற்றம்? ரவி மோகன் பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சென்சார் சர்ச்சை குறித்து கனிமொழி! | ஜன நாயகன் | DMK

‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் புதிய படம் பெயர் அறிவிப்பு!

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கணும்! ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

தைத்திருநாள் வந்தாச்சு! தமிழகமெங்கும் பொங்கல் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT