ராமநாதபுரம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட கிட்டங்கியை ஆட்சியா் ஆய்வு!

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தக் கிட்டங்கியில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதே போல, வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் செ. ஹபிபூா் ரஹ்மான், வட்டாட்சியா்கள் காளீஸ்வரன், ஸ்ரீதரன் (தோ்தல்), அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT