சிவகங்கை

திருப்பத்தூரில் சாலை விபத்து: இளைஞர் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார். 

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார்.
     திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதி கள்ளிப்பட்டுவைச் சேர்ந்தவர் ராமன் மகன் சேகர் (37). இவர் திங்கள்கிழமை இரவு சிவகங்கை சாலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தீயணைப்புத்துறை அலுவலகம் அருகில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில்,  ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT