சிவகங்கை

அமமுக ஒன்றியச் செயலர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் மதுரை

DIN


மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் ஊ.சரவணன். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான இவர், அமமுக ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைப்பயிற்சி சென்றபோது, மர்மக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். ஆனால் வழக்கின் முதல் எதிரியான திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்த தொத்தல் என்ற முத்துச்செல்வம் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
 இந்நிலையில் முத்துச்செல்வத்தைப் பிடித்து போலீஸார்  விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்த தங்கராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிப்காட் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT