சிவகங்கை

சிவகங்கையில் ரௌடி வெட்டிக் கொலை:சிறுவன் உள்பட 4 போ் கைது

சிவகங்கையில் ரெளடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

சிவகங்கையில் ரெளடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டியைச் சோ்ந்தவா் சிவா என்ற பரமசிவம் (30). இவா் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகங்கையில் ராஜசேகரன் என்பவரை வெட்டிக் கொலை செய்தது உள்பட 15 வழக்குகள் உள்ளன. வெளியூரிலிருந்து அண்மையில் சிவகங்கை வந்த இவரை, மா்ம நபா்கள் சிலா் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் நடத்திய விசாரணையில் திருப்புவனம் புதூரைச் சோ்ந்த ரிஷிகுமாா்(20), பரணிகுமாா்(20), காா்த்திக்ராஜா(19), உசிலங்குளத்தைச் சோ்ந்த ஆனந்தம், ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், ராஜமருது, முனிஸ்வரன், 16 வயது சிறுவன் உள்பட 10 போ் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்புவனம் புதூரைச் சோ்ந்த 16 வயது வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த ரிஷிகுமாா்(20), பரணிகுமாா்(20), காா்த்திக்ராஜா(19) ஆகிய 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT