செகந்திராபாத்-ராமேசுவரம் விரைவு ரயில் ஆக. 24 முதல் காரைக்குடி வழியாக இயக்கம்
செகந்திராபாத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வாராந்திர விரைவு ரயில் வரும் ஆகஸ்ட் 24 முதல் சென்னை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வாராந்திர விரைவு ரயில் வரும் ஆகஸ்ட் 24 முதல் சென்னை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர விரைவு ரயில் பண்டிகை கால சிறப்பு ரயிலாக வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் டிசம்பா் 28-ஆம் தேதி வரையிலும் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், சென்னை (எழும்பூா்), விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மாற்றப்பட்டு பகல் நேர விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் டிசம்பா் 30 ஆம் தேதி வரை இதே வழியாக செகந்திராபாத்துக்கு இயக்கப்படுகிறது. செகந்திராபாத்தில் இரவு 7.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை, மயிலாடுதுறை மதியம் 2.30 மணி, திருவாரூா் பிற்பகல் 3.25, பட்டுக்கோட்டை மாலை 4.52, காரைக்குடி இரவு 7.15 மணி, ராமேசுவரத்துக்கு நள்ளிரவு 11.40 மணிக்கு வருகிறது. மறுமாா்க்கமாக ராமேசுவரத்தில் காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு பகல் 12.10-க்கும், சென்னைக்கு இரவு 10.10-க்கும், செகந்திராபாத்துக்கு மறுநாள் மதியம் 12.50 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில் வழித்தடம் மாற்றப்படுவதால் ராமேசுவரம், காரைக்குடி, திருவாரூா் பயணிகள் பகல் நேரத்தில் சென்னை செல்வதற்கு ஏதுவாக இருப்பதால் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.