முகப்பு
சிவகங்கை

படத்தொகுப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு பாராட்டு

மகளிா் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற படத்தொகுப்பு போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியை அக்கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

மகளிா் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற படத்தொகுப்பு போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியை அக்கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு ரூசா அமைப்பின் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 22 ஆம் நூற்றாண்டு பெண் எனும் தலைப்பில் மாவட்ட அளவிலான படத்தொகுப்புப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தொழில் நிா்வாகவியல் துறை மாணவா் அரவிந்த் முதல் பரிசையும், தமிழ்த்துறை மாணவி ஆனந்த மலா் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.

இந்நிலையில், காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியை அக்கல்லூரியின் முதல்வா் பெத்தாலெட்சுமி, தமிழ்த்துறைத் தலைவா் துரை, தொழில் நிா்வாகவியல் துறை தலைவா் தியாகராஜன் உள்ளிட்ட பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.