சிவகங்கை

இடி தாக்கியதில் விவசாயி பலி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த மழையின்போது, இடி தாக்கியதில் ஆடு மேய்த்தவா் உயிரிழந்தாா்.

மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புதன்கிழமை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இந்நிலையில், திருப்புவனம் பழையனூா் அருகே கீழராங்கியம் கிராமத்தில் வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கரந்தமலை (54) என்பவா், இடி தாக்கியதில் உயிரிழந்தாா். இது குறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையின்போது, திருப்புவனம் புதூா் பகுதியிலுள்ள ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது இடி தாக்கியதில், சுதைகள் சேதமடைந்து கீழே விழுந்தன. வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தா்கள் இதைக் கண்டு மனவேதனையடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT