சிவகங்கை

செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பக்தர்கள் கரகம் சுமந்து சாமியாடி வந்து அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறினர்.

இக்கோயிலில் மாசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் குடிமக்கள் கோயிலில் இருந்து மாலையில் பூஜைப் பெட்டிகளுடன்  அருகே உள்ள வைகை ஆற்றுக்கு புறப்பட்டனர்.

இரவு வைகை ஆற்றிலிருந்து கரகம் சுமந்து சாமி ஆடியபடி பக்தர்கள் மேளதாளம், வானவேடிக்கையுடன் கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர். கோயிலிலுக்கு அருகே சாமியாடிகள் அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.  

மாசி உற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்

அதைத்தொடர்ந்து  காமாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று உள்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அதன்பின் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் சனிக்கிழமை காலை கோயில் பெண்ணடி மக்கள் காமாட்சி அம்மனுக்கு பால் குடங்கள் எடுத்து செய்களத்தூர் கிராமத்தை வலம் வந்து கோயிலுக்கு வந்தடைந்தனர்.

அதன்பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் கே.நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பி. ஏ.நாகராஜன், எஸ்.பி.எம். அன்புக்குமார், அ.கி.சு. யாழ் முருகன், கி.செ. முத்துப்பாண்டியன், இரா.திருஞானம், கா.மகா.சரவணன், ம.இராஜா, பி.பழனியப்பன் மற்றும் கோயில் பங்காளிகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT