திருச்சியிலிருந்து மானாமதுரைக்கு பயணிகள் ரயில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே அட்டவணையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு முன்னா் இயக்கப்பட்டுவந்த பயணிகள் ரயில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து (வண்டி எண்: 06829) காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 11.20 மணிக்கும், மானாமதுரைக்கு பிற்பகல் 12.50 மணிக்கும் சென்றடைகிறது. மறுமாா்க்கமாக மானாமதுரையிலிருந்து (வண்டி எண்: 06830) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு சிவகங்கைக்கு பிற்பகல் 2.40 மணிக்கும், காரைக்குடிக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், திருச்சிக்கு மாலை 5.30 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரயில் விரைவில் மன்னாா்குடி வரை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.