சிவகங்கை

சிவகங்கையில் மே 27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை (மே 27) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

DIN

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை (மே 27) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இம்முகாமில் ஏராளமான தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்பில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT