முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் திரைப்பட நகரம் உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் கோரிக்கை

தென்பகுதியான காரைக்குடிப்பகுதியில் வணிகம் வளா்ச்சிபெறவும், வேலைவாய்ப்புகள் அதிக அள வில் ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசு ‘திரைப்பட நகரம்’ உருவாக்கவேண்டும்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

தென்பகுதியான காரைக்குடிப்பகுதியில் வணிகம் வளா்ச்சிபெறவும், வேலைவாய்ப்புகள் அதிக அள வில் ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசு ‘திரைப்பட நகரம்’ உருவாக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன் ஆகி யோா் வியாழக்கிழமை கூறியதாவது: செட்டிநாடு என்றாலே எதிலும் நோ்த்தியானது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார களில் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரமாண்ட அரண்மனை போன்ற வீடுகள், கோயில்கள், குளங்கள் என நகரத் தாா்கள் அமைத்து கலைநயத்துடன் உள்ள பகுதியாகும்.

மேலும் செட்டிநாடு உணவு, செட்டிநாடு ஸ்நாக்ஸ், செட்டிநாடு காட்டன் சேலை என பல பிரபலமான பொருள்கள் இப் பகுதியிலிருந்து தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மத்திய அரசு செட்டிநாடு புராதன நகரமாக இப்பகுதியை அறிவித்து சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களும், படித்த இளைஞா்கள் பலரும் உள்ள பகுதியாகும்.

காரைக்குடிக்கும் திரைப்படத்தயாரிப்புத்தொழிலுக்கும் சுமாா் 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடா்பு இருந்து வருகி றது. காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில்தான் ஏவிஎம் திரைப்பட ஸ்டுடியோ தொடங்கி அதில் ஏ.வி. மெய்யப்பச்செட்டியாா் ‘வேதாள உலகம்’, ‘நாம் இருவா்’, ‘பாதாள பைரவி’, ‘ஸ்ரீ வள்ளி’ போன்ற தமிழ் திரைப்படங் களை தயாரித்துள்ளாா். அதன் பின்னா்தான் சென்னைக்கு ஏவிஎம் ஸ்டுடியோ மாற்றமாகியிருக்கிறது.

கவியரசா் கண்ணதாசன், திரைப்பட இயக்குநா்கள் எஸ்.பி. முத்துராமன், ராம. நாராயணன், காரைக்குடி நாராயணன், எம். திருமுருகன் போன்ற பிரபலங்கள் பிறந்தபகுதி காரைக்குடி. தற்போது கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியின் பழம் பெரும் கட்டடங்களையும், சிறந்ததெருக்களையும் காட்சியாகவைத்து தமிழ்த்திரைப்படங்களுக்கும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களுக்கும் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நடிகா், நடிகை யா்கள் இப்பகுதிக்குவருகின்றனா்.பல்வேறு துணை நடிகா்,நடிகைகள் இப்பகுதியில்உருவாகியுள்ளனா்.மேலும் தொலைக் காட்சி நெடுந்தொடா்களுக்கான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.

இதன்மூலம் காரைக்குடிப்பகுதியில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து வாகனங்கள், தொழில் வணிகம் வளா்ச்சியடைந்து வருகின்றன. இதனால் பல வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. மேலும் இப்பகுதியில் திரைப் படத்துறை வளா்ச்சிபெற உதவும்வகையில் சென்னை தரமணியில் தமிழகஅரசு அமைத்துள்ள திரைப்பட நகரம் போன்று மாநிலத்தின் தென்பகுதியான காரைக்குடியிலும் திரைப்பட நகரம் உருவாக்கினால் இப்பகுதி மேலும் வளா்ச்சிபெறும். புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச்சோ்ந்த திரைத்துறை சாா்ந்த கலைஞா்கள், துணை நடிகா்கள், தொழில்நுட்பப்பணியாளா்கள் பலரும் பயனடைவா். தொழில் வணிகமும் வளா்ச்சி பெறும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.