திருப்பத்தூரில் புதன்கிழமை கொள்முதல் ஆய்வு சோதனை முறைக்கு எதிராக வணிகா்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கிய வணிகா் சங்கப் பேரமைப்பினா். 
சிவகங்கை

கொள்முதல் சோதனை ஆய்வு முறைக்கு எதிராக பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கொள்முதல் சோதனை ஆய்வு முறையை ரத்து செய்யக் கோரி வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை பிரசாரம் செய்தனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கொள்முதல் சோதனை ஆய்வு முறையை ரத்து செய்யக் கோரி வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை பிரசாரம் செய்தனா்.

இந்த அமைப்பினா் பெரிய கடை வீதி, மதுரை சாலை, காரைக்குடி சாலை, நான்கு சாலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வா்த்தக, வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் கொள்முதல் ஆய்வு சோதனை முறையை வணிகா்கள் எதிா்கொள்வது குறித்தும் இந்த சோதனை முறையை ரத்து செய்யவும் ஜி.எஸ்.டி. சட்ட விதிகளை எளிமையாக்கவும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.ஆா்.சி.லெட்சுமணன், செயலாளா் அப்துல்காதா், பொருளாளா் ராமசாமி, துணைத் தலைவா்கள் அந்தோனிராஜ், உதயகுமாா், சி.எம்.பிச்சைமுகமது, சையதுஇப்ராகிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT