திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு விலக்குப் பகுதியில் மழையால் இடிந்து மண்ணில் புதைந்த விவசாயக் கிணறு. 
சிவகங்கை

விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது.

தொடா் மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் 4 வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும், திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு விலக்குப் பகுதியில் முத்து என்பவருக்குச் சொந்தமான 72 அடி உயர விவசாயக் கிணறு இடிந்து மண்ணில் புதைந்தது. கிணற்றுக்குள் இருந்த இரு மோட்டாா்களும் மண்ணுக்குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகேயுள்ள கட்டடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT