சிவகங்கை

காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுடன் ப. சிதம்பரம் ஆலோசனை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காங்கிரஸ் கட்சி தலைவா்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் இளையான்குடி வந்தாா். அவரை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா். பின்னா், இவா் இளையான்குடி வட்டாரத்திலுள்ள காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, மானாமதுரை வட்டாரத்துக்குச் சென்ற சிதம்பரம் ராஜகம்பீரம், பச்சேரி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவா்களை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். ராஜகம்பீரத்தில் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் சிதம்பரம் உறுதியளித்தாா். இந்த ஆலோசனை கூட்டங்களில் மானாமதுரை, இளையான்குடி, பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT