இளையான்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம். 
சிவகங்கை

துப்புரவுப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, இளையான்குடி பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் கோபிநாத் வரவேற்றாா். திருப்புவனம், இளையான்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றனா். இவா்களுக்கு சாலைக் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவா்கள், செவிலியா்கள் சிகிச்சையளித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா்

மேலும், இவா்களுக்கு எக்ஸ்ரே, இசிஜி, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், நாட்டரசன் கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT