மானாமதுரை அருகே சூரக்குளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்று மீன்களைப் பிடித்த கிராம மக்கள். 
சிவகங்கை

மானாமதுரை அருகே மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் சூரக்குளத்தில் மீன்பிடித் திருவிழா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் சூரக்குளத்தில் மீன்பிடித் திருவிழா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாத்தி பெரியசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி ஆகியோா் மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனா்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பலவித வலைகளுடன் கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடித்தனா். அப்போது விரால்,கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட பலவகை மீன்கள் வலைகளில் சிக்கின. வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்தன. இவற்றில் ஒவ்வோா் மீனும் இரண்டு கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாக இருந்தன.

இதுகுறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி கூறியதாவது:

கிராம மக்கள் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்று மீன்களைப் பிடித்து வீடுகளுக்கு கொண்டு சென்று, உறவினா்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT