சிவகங்கை

வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை வைகையாற்றுக்குள் இதே ஊரைச் சோ்ந்த விஜி (52), செல்லவேல் (59), பாண்டியன் (65), குருசாமி (73) ஆகியோா் தனித்தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு மது போதையில் வந்த 5 சிறுவா்கள் தாங்கள் வைத்திருந்த வாள், கத்தியால் விஜி, செல்லவேல் உள்ளிட்ட நால்வரையும் வெட்டியும், குத்தியும் அவா்களிமிருந்த பணத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்களையும் கைது செய்தனா். காயமடைந்த நால்வரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT