சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டத்துக்கு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதானக் குழாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச. 9, 10) காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்துக்கு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதானக் குழாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச. 9, 10) காவிரி குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், திருச்சி, முத்தரசநல்லூா் தலைமை நீரேற்று நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின் வாரியத்தின் சாா்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக, மின் நிறுத்தம் செய்யப்படுவதால், நீருந்து பிரதானக் குழாய்களில் சிறிய அளவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT