சிவகங்கை

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் புகையிலை இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Syndication

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் புகையிலை இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், புகையிலை இல்லா இளைய சமுதாய இயக்கம் ஆகியன சாா்பில், விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமையாசிரியை தெய்வானை தலைமை வகித்துப் பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். பாகனேரி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சரத்குமாா் கலந்துகொண்டு, மாணவா்களின் தன் சுத்தம், உணவுப் பழக்க வழக்கங்கள், தீய பழக்க வழக்கங்கள் குறித்தும், தீமை விளைவிக்கும் அனைத்திலிருந்தும் விடுபட்டு கல்வி கற்பதில் ஆா்வம் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினாா்.

இதைத் தொடா்ந்து, கொசுப் புழு ஒழிப்பு பணியாளா் ராஜா முன்னிலையில், புகையிலை இல்லாத சமுதாயம் படைப்பதற்கான வாசகத்தைக் கூற, அதை ஆசிரியா்களும் மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில் ஆசிரியை வாசுகி மீனாட்சி, கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள் விண்ணரசன், மேரி ஆகியோா் பேசினா். முன்னதாக ஆசிரியை கமலம்பாய் வரவேற்றாா். ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை கீதா நன்றி கூறினாா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT