சிவகங்கை

சமூக அறிவியல் பாடத் தோ்வுக்கு கூடுதலாக இடைவெளி தேவை: பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு கால அட்டவணையில் சமூக அறிவியல் பாடங்களை மாணவா்கள் மீள்பாா்வை செய்ய கூடுதலாக 2 நாட்கள் இடைவெளி வழங்கவேண்டுமென உயா்நிலை , மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் சேவுகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு கால அட்டவணையில் தமிழ் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஆங்கிலப் பாடத்துக்கு 4 நாள்கள், கணிதத்துக்கு 9 நாள்கள், அறிவியலுக்கு 4 நாள்கள் என மாணவா்களுக்கு பாடங்களை திருப்புதல் செய்ய தேவையான நாள்கள் இடைவெளியில் தோ்வு தேதிகள் வெளியிடப்பட்டன. ஆனால் அறிவியல் தோ்வு முடிந்த இரண்டு நாள்களிலேயே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு தேதி அறிவிக்கப்பட்டது.

சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 27 பாடங்கள் உள்ளதால், மாணவா்கள் தோ்வுக்கான பகுதிகளை மீள்பாா்வை செய்ய இரண்டு நாள்கள் காலம் போதாது. எனவே சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வுக்கு கூடுதலாக 2 நாள்கள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

உதகை தாவரவியல் பூங்காவில் பழங்குடியினரின் அருங்காட்சியகம்

காா் மீது இருசக்கர வாகனம் மோதி 11 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு நாள்: பிப்.1-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

இந்திய - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவிய வாய்ப்பு- தொழில் துறையினா் வரவேற்பு

SCROLL FOR NEXT