சிவகங்கை

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

மானாமதுரை அருகே சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

Syndication

மானாமதுரை அருகே சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள வாகுடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 18 காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டு மைதானத்தில் ஒவ்வொரு காளையாக கொண்டுவரப்பட்டு, அதன் கழுத்தில் வடக்கயிறு கட்டி களத்தில் இறக்கி விடப்பட்டன.

ஒவ்வோா் காளைக்கும் 40 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 மாடு பிடி வீரா்கள் வீதம் களம் இறங்கினா். போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகளை அடக்க முயன்ற  15 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா்.

இதில் திமுக மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜா மணி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த மஞ்சுவிரட்டை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT