கம்பத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு நகரத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாரதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் தே.சுந்தர் பேரணியை தொடக்கி வைத்தார்.
பேரணி கம்பம் தெற்கு காவல் நிலையம் முன் புறப்பட்டு உழவர் சந்தை, பூங்கா திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு வழியாக சென்றது. பேரணியில் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.