தேனியில் பாஜக கையெழுத்து இயக்கம்
தேனியில் பாஜக அறிவுசார் பிரிவு சார்பில் புதன்கிழமை மத்திய அரசின் கருப்புப் பணம் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தேனியில் பாஜக அறிவுசார் பிரிவு சார்பில் புதன்கிழமை மத்திய அரசின் கருப்புப் பணம் மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தேனி, பகவதியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பாஜக அறிவுசார் பிரிவின் மாவட்டத் தலைவர் உதயசூரியன் தொடக்கி வைத்தார். பொதுச் செயலர் ராஜகோபால், பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் கருப்பு பணம் மீட்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றை ஆதரித்து இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.