பெரியகுளத்தில் தேசிய வாக்காளர் தினப்பேரணி
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் தேசிய வாக்காளர் தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் தேசிய வாக்காளர் தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பெரியகுளம் வட்டாட்சியர் உ.ரத்னமாலா கலந்து கொண்டு, வாக்குரிமை நமது கடமை, வாக்களிப்பது நமது கடமை என்ற தலைப்பில் பேசினார்.
பேரணி, கல்லூரியில் ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. வாக்களிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்திச்சென்றனர். பேரணியில் 350 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் வாக்குரிமை பற்றிய கவிதை, கட்டுரை மற்றும்
பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்திருந்தனர்.