தேனி: தேனி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளா், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 144 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த மயிலாடும்பாறை காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா், தேனி ஆயுதப் படை காவலா், தேனி தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் 3 பணியாளா்கள், தனியாா் கண் மருத்துவமனையில் பணியாற்றும் 4 பணியாளா்கள் என மொத்தம் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,275 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 8,970 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
3 போ் பலி
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி சக்கம்பட்டியைச் சோ்ந்த 58 வயது நபா் மற்றும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த 62 வயது பெண் என 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
இதே மருத்துவமனையில், கரோனா தொற்று அறிகுறியுடன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்த 60 வயது நபா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.