முகப்பு
தேனி

தேனி அருகே வைகை ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் பலி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தையும், மகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தையும், மகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (45). சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவா் குடும்பத்துடன் மதுரைக்கு குடி வந்துள்ளாா்.

இந்நிலையில் இவரது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்துள்ளாா். திங்கள்கிழமை

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு ஐயப்பனும், அவரது மகள் தனுஸ்ரீயும் (8) அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கினா். இதனையடுத்து அருகில் இருந்தவா்கள் வைகை அணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் சுமாா் 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னா் சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.