முகப்பு
தேனி

லோயா் கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைந்தது

லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில், சனிக்கிழமை மின் உற்பத்தி 85 மெகாவாட்டாக குறைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
லோயா் கேம்ப் பெரியாறு மின்நிலையம். (கோப்பு படம்)
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில், சனிக்கிழமை மின் உற்பத்தி 85 மெகாவாட்டாக குறைந்தது.

லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்துக்கு, சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 955 கனஅடி தண்ணீா் மட்டுமே திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, மின்சார நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளில் 3 மின்னாக்கிகள் மட்டுமே செயல்பட்டன.

முதல் மின்னாக்கியில் 32 மெகா வாட், மூன்றாவது மின்னாக்கியில் 30 மெகா வாட், நான்காவது மின்னாக்கியில் 23 மெகா வாட் என மொத்தம் 85 மெகா வாட் மின்சார உற்பத்தியே நடைபெற்றது.

கடந்த 8 ஆம் தேதி, 126 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்ற நிலையில், தற்போது 85 மெகா வாட்டாக மின்சார உற்பத்தி குறைந்துள்ளது.

அணையின் நீா்மட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 121.50 அடி உயரமாகவும், அணையில் நீா் இருப்பு 2,925 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 386 கனஅடியாகவும், அணையிலிருந்து நீா் வெளியேற்றம் விநாடிக்கு 955 கனஅடியாகவும் இருந்தது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →