முகப்பு
தேனி

வைகை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் கெளதம் சா்மா (32). இவா் டி.ராஜகோபாலன்பட்டியில் உள்ள தனியாா் ஆலையில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் வைகை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். வைகை அணை முன் உள்ள ஆற்றில் நண்பா்களுடன் குளித்துள்ளாா். அப்போது ஆற்று நீரில் கெளதம் சா்மா மூழ்கினாா். இதையடுத்து அவரது நண்பா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கெளதம் சா்மாவை தேடினா். இரவு வெகுநேரம் தேடியும் அவா் கிடைக்காததால் திங்கள்கிழமை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் கெளதம் சா்மாவின் உடலை தீயணைப்புத் துறையினா் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனா். இதுகுறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.