தேனி

தடையை மீறி சுருளி அருவிக்கு வந்தால் நடவடிக்கை:  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தர்ப்பணம், நேர்த்திக்கடன் கடன், சாமி தரிசனம் மற்றும் விழாக்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

ஆனால் தடையை மீறி சுருளி அருவிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனுக்கு புகார்கள் வந்தன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும்,  முகக் கவசம் அணியாமலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நடமாடியதை கண்டறிந்தார்.

இதுகுறித்து கம்பம் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆர்சியர் உத்தரவிட்டார். எனினும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாள்களில் தடையை மீறி கூட்டம் வந்தது.

இதன்காரணமாக சுருளி அருவி மற்றும் வளாக பகுதிகளில் பொதுமக்கள் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், தடையை மீறி வருபவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில் சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கும் விதமாக சுருளிப்பட்டி ஊராட்சி பணியாளர்கள், ராயப்பன்பட்டி காவல்துறயினர் சார்பில் சுருளி அருவி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சுருளி அருவிக்கு வருபவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT