18 ஆம் கால்வாயில் மாவட்ட ஆட்சியர் வீ.முரளிதரன் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து வைத்தார், அருகில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். 
தேனி

லோயர் கேம்ப் அருகே 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வீ. முரளிதரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வீ. முரளிதரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் 18ஆம் கால்வாய் மூலம் 4614.25 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வீ. முரளிதரன் தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முன்னாள் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, தாசில்தார் அர்ஜுனன்,  உள்ளிட்ட அதிகாரிகள்  பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வீ.முரளிதரன் கூறியது,

உத்தமபாளையம் வட்டத்தில் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், வெம்ப கோட்டை, பொட்டிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, போடி தாலுகாவில் மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 4614.25 ஏக்கர் பாசன நிலங்களுக்கு இந்த தண்ணீர் செல்கிறது,

விவசாயிகள் அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT